ரஜினி போட்ட Twitter பதிவு… மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி பொங்கலுக்கு வரும் என்று அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக வந்த செய்திதான் லைகா வெளியிட்ட அந்த அறிவிப்பு.
இன்னும் படம் சென்சார் செல்லாததால் ரிலீசுக்கு காலதாமதம் ஆகும் என்ற அறிவிப்புதான் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் லைக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டு தலையில் இடியை இறக்கி விட்டது.
இந்த நிலையில் தான் ரஜினி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து twitter பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் “நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான்” என்பது போன்ற பதிவு அஜித்துக்கும், அஜித் ரசிகர்களுக்கும் ஆறுதலாக உள்ளதாம்.
எப்படியாவது இந்த ஏமாற்றத்தை சரி செய்வதற்காக ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரியில் விடாமுயற்சியும், ஏப்ரல் 10ம் தேதி Good Bad Ugly வெளிவரும் என அஜித்தின் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருஷத்துக்கு ஒரு படம் ரிலீஸ் செய்யும் அஜித் தற்போது ரெண்டு மாத இடைவேளையில் இரண்டு படம் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.