ஆசியாவுக்கான மலிவுக் கட்டண விமான சேவையை நிறுத்தும் எயார் ஜப்பான்
ஆசியாவில் மலிவுக் கட்டண விமானச் சேவையை முன்னெடுக்கும் எயார் ஜப்பான் (Air Japan) தனது சேவைகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜப்பானின் ANA விமான நிறுவனக் குழுமத்தைச் சேர்ந்த எயார் ஜப்பான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தனது அனைத்து மலிவுக் கட்டண விமானச் செயல்பாடுகளையும் நிறுத்தவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எயார் ஜப்பானின் இறுதி விமானச் சேவை, அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் திகதி நள்ளிரவு 12.55 மணிக்குச் சிங்கப்பூரிலிருந்து ஜப்பானின் நரிட்டா (Narita) விமான நிலையத்தை சென்றடையும்போது நிறைவடையும்.
எயார் ஜப்பான் விமான சேவையை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ANA தலைமை நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரேனில் நடக்கும் போர் மற்றும் விமானங்களின் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ANA குழுமத்தில் முழுச் சேவையளிக்கும் ANA விமானச் சேவை மற்றும் மலிவுக் கட்டணச் சேவை வழங்கும் Peach ஆகியன மட்டுமே செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..





