இந்தியா செய்தி

ஏர் இந்தியா விபத்து எதிரொலி – அனைத்து போயிங் 787 விமானங்களையும் சோதிக்கும் இந்தியா

ஏர் இந்தியா விபத்தையடுத்து இந்தியா அதன் அனைத்து போயிங் 787 விமானங்களிலும் அவசரமாகச் சோதனை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

270க்கும் அதிகமானோர் உயிரிழந்த விமான விபத்தைத் தொடர்ந்து அந்த அதிரடிச் சோதனை நடத்தப்படுகிறது.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் போயிங் 787 ரகத்தைச் சேர்ந்ததாகும்.

அசம்பாவிதத்துக்கான எல்லாச் சாத்தியங்களையும் அதிகாரிகள் தீர விசாரிப்பதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

இந்தியாவில் மொத்தம் 34 போயிங் 787 ரக விமானங்கள் உள்ளன. அவற்றில் 8 விமானங்கள் ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விமானங்களின் இயந்திரம், இறக்கை, தரையிறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி ஆகியவை மீது குறிப்பாக கவனம் செலுத்தப்படுகிறது.

அரசாங்க மறுஆய்வுக் குழு அதன் ஆய்வை மூன்ற மாதத்தில் நிறைவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போயிங் நிறுவனத்தையும் பிரித்தானியா, அமெரிக்கா ஆகியவற்றையும் சேர்ந்த விசாரணை அதிகாரிகள் விசாரணையில் உதவுகின்றனர்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி