மோடி வருகைக்கு முன்பே மெகா கூட்டணி: தமிழக தேர்தல் களத்தில் அதிரடி காட்டும் பாஜக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவை தினகரன் அறிவித்தார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த தினகரன், தற்போது “விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை” என்றும், இது ஒரு “பங்காளிச் சண்டை” என்றும் கூறி தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் அமையவே இந்த ஓரணி திரளும் முயற்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி இல்லாமல் இந்தச் சந்திப்பு நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இந்த இணைப்பின் மூலம் தமிழக தேர்தல் களம் மும்முனைப் போட்டியை நோக்கி நகர்கிறது.





