அரசியல் தமிழ்நாடு

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையும் அரசியல் ஆயுதமாக்குகிறது அ.தி.மு.க.!

அ.தி.மு.க . ADMK நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் MGR 109-வது பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் 18, 19 ஆகிய திகதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி dappadi Palaniswami இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; , புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தாங்கள் சார்ந்த மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 18ம் திகதி தென் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்ற உள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் நகர்வாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் பயன்படுத்தப்படுகின்றது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அதிமுக அரசியல் ரீதியில் தனது செல்வாக்கை இழந்து தவிக்கின்றது. பல அணிகளாக கட்சி பிளவுபட்டுள்ளது.

ஆளுங்கட்சி என்ற அந்தஸ்த்தை மட்டுமல்ல பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையும் இழக்கும் நிலையில் உள்ளது.

இந்நிலையிலேயே கட்சியின் முன்னாள் தலைவர்களின் பிறந்த தினம், இறந்த தினம் என்பவற்றைக்கூட அரசியலுக்காக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
error: Content is protected !!