புகைப்படத்தை வீடியோவாக மாற்றும் AI கருவி!
இப்போது எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே AI பற்றிய பேச்சுகள்தான். தொடக்கத்தில் சாதாரணமாக ஒரு சில விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பம், தற்போது கல்வி, மருத்துவம், ஐடி, விவசாயம் என எல்லாத்துறையிலும் ஆதிகத்தை செலுத்தும் நிலையை எட்டியுள்ளது.
இதுவரை கோடிங், கன்டன்ட் ரைட்டிங் போன்ற விஷயங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பம், தற்போது எடிட்டிங்கிளும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது, கன்டென்ட் கிரியேட்டர்கள் மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்க பயன்படுவதால் தற்போது அதிகமாக இவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் Runway என்ற AI கருவி, மோஷன் பிரஷ் என்ற அம்சத்தை மையமாகக் கொண்டு செயல்படும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ஒரு படத்தில் உள்ள விஷயங்களை உயிரோட்டம் நிறைந்த காணொளியாக மாற்றலாம். உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் பறவை ஒன்று அசையாமல் நின்றால், இந்த கருவியைப் பயன்படுத்தி சிறிய அனிமேஷன்களை சேர்த்து அது தத்துரூபமாக அசைவது போல மாற்ற முடியும். இந்த அம்சத்தைப் பற்றி சொல்லும்போது வேடிக்கையாக இருந்தாலும், அதை செயல் வடிவமாகப் பார்க்கும்போது அற்புதமான உணர்வைக் கொடுக்கிறது.
இதைப் பயன்படுத்தி எந்த புகைப்படமாக இருந்தாலும் அதை வீடியோ போல அசையும் தன்மை கொண்டதாக மாற்ற முடியும். ஒரு நீர்வீழ்ச்சி புகைப்படம் இருந்தால் அது உண்மையிலேயே மேலிருந்து கொட்டுவது போல செய்யலாம். மரத்தில் இலைகள் இருக்கும் புகைப்படம் இருந்தால், அவை அழகாக அசைவது போலவும் மரத்திலிருந்து உதிர்வது போலவும் காட்டலாம். இப்படி ஒரு புகைப்படத்தை பயன்படுத்தியே தத்ரூபமான அனிமேஷன் காட்சிகளை இந்த Runway எஐ கருவி மூலமாக செய்ய முடியும்.
இந்த கருவி பேசிக், ஸ்டேண்டர்ட், ப்ரோ, அன்லிமிடெட் மற்றும் என்டர்பிரைசஸ் என 5 பிளான்களில் வருகிறது. நீங்கள் இதில் எந்த பிளானை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறான சேவைகள் உங்களுக்குக் கிடைக்கும். இந்த மோஷன் பிரஷ் கருவியை முழுமையாகப் பயன்படுத்த அதற்கான தொகையை நீங்கள் செலுத்த வேண்டும். இதற்கு முதலில் அவர்களின் வெப்சைட்டில் லாகின் செய்து, உங்களின் விவரங்களை கொடுத்து சந்தாதாரராக மாறினால், அதில் உள்ள எல்லா அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு இந்த ஏஐ கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.