இஸ்ரேலின் பிரதமரை பதவி விலகுமாறு மீண்டும் அழைப்பு
இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான யாயர் லாபிட் , இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகுமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
“போரின் நடுவில் பிரதமரை மாற்றுவது நல்லதல்ல. ஆனால் பதவியில் இருப்பவர் மோசமானவர். அவரால் தொடர முடியாது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு தனது போர்க்கால கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. கட்சிகள் விலகி, அரசாங்கத்தை கவிழ்க்கக்கூடும்.
அக்டோபர் 7 தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு பொறுப்பேற்காததற்காக நெதன்யாகு கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
(Visited 7 times, 1 visits today)