ஆப்கானிஸ்தான் பனிப்பொழிவு மற்றும் கனமழை – 3 நாட்களில் 61 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று நாட்களில் பனி மற்றும் கனமழையால் 61 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை ஆணையம்(ANDMA) வெளியிட்ட தரவுகளின்படி, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் இந்த இறப்புகள் முக்கியமாக மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளின் ஆரம்ப புள்ளிவிவரங்களில் 110 காயமடைந்தவர்களும் சேதமடைந்த 458 வீடுகளும் அடங்கும் என்று ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், பனிமூட்டமான சாலைகளில் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.




