ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – ஆரஞ்சு எச்சரிக்கை அமுலில்! பலி எண்ணிக்கை உயர்வு!
ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-i-Sharif) நகரில் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று இடம்பெற்றது.
இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 320 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சகம் அச்சம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அதன் நிலநடுக்க தாக்க அமைப்பு குறித்து ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 3 visits today)





