ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு – தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ISIL
ஆப்கானிஸ்தான்(Afghanistan) தலைநகரில் உள்ள ஒரு சீன உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிய அரசான ISIL(ISIS) பொறுப்பேற்றுள்ளது.
தலைநகர் காபூலில்(Kabul) நடந்த இந்த குண்டுவெடிப்பில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.
காபூலில் சீனர்கள் அடிக்கடி வந்து செல்லும் ஒரு உணவகத்திற்குள் தற்கொலை குண்டுதாரி நுழைந்து வெடிக்கும் அங்கியை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் அயூப்(Ayub) என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட ஒரு சீன(Chinese) நாட்டவரும் ஆறு ஆப்கானியர்களும்(Afghans) கொல்லப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் ஜத்ரான்(Khalid Zadran) குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
ஆப்கானிஸ்தானின் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் மரணம்




