இலங்கை செய்தி

இலங்கை வந்தார் ADB தலைவர்: ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு!

மூன்று நாள் பயணமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB தலைவர் மசாட்டோ கன்டா Masato Kanda இன்று (23) இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை கைத்தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ Dr.Anil Jayantha Fernando வரவேற்றார்.

இன்று கொழும்பு துறைமுகத்திற்கு சென்று கட்டுப்பாட்டுக் கோபுரத்தை ஆய்வு செய்ய உள்ள ADB தலைவர்,  தனியார் துறை பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு மதிய விருந்தில் கலந்துகொள்வார்.

பிற்பகலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடத் தூதரகத்தில் நடைபெறும் வரவேற்பு மற்றும் பணியாளர் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

நாளை, கன்டாவும் அவரது குழுவினரும், டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக கேகாலை மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!