அதிரடி நாயகி விஜயசாந்தி எடுத்த அதிரடி தீர்மானம்
பிரபல நடிகையும், முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி காங்கிரசில் இணைந்தார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இவர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஆக்ஷன் நாயகியாக வலம் வந்தவர் விஜயசாந்தி. அரசியலில் பயணிக்க தொடங்கிய இவர் 2009ல் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., கட்சியில் இணைந்து, மேடக் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.
பின்னர் அவருடனான கருத்து வேறுபாட்டால், 2020ல் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.

தெலுங்கானா சட்டசபை தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த விஜயசாந்தி பா.ஜ., கட்சியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.

(Visited 10 times, 1 visits today)





