பொழுதுபோக்கு

அனைத்தும் முடிந்தது… இனி ஓய்வுதான்… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா

கோலிவுட், டோலிவுட் என கலக்கி வந்த சமந்தா தற்போது பான் இந்தியா நடிகையாக மிரட்டி வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துள்ள அவர், 6 மாதங்கள் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கும் முடிவில் உள்ளார்.

மயோசிடிஸ் பாதிப்பால் சிகிச்சை எடுத்துவந்த சமந்தா, மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப முயற்சித்து வருகிறாராம்.

இந்நிலையில், கோயில் கோயிலாக சென்றுவரும் சமந்தா, தற்போது வேலூர் அருகேயுள்ள பொற்கோயிலில் வழிபட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சினிமா மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வரும் சமந்தா, கவர்ச்சிக்கும் அன்லிமிடெட் சிக்னல் கொடுத்துவிட்டார். நாக சைதன்யாவை பிரிந்த பின்னர் இன்னும் அதிரடியான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

முழுக்க முழுக்க ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ரொம்பவே நெருக்கமாக நடித்துள்ளார் சமந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தன.

அதனால் விரைவில் ட்ரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மயோசிடிஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து 6 மாதங்கள் வரை ஓய்வெடுக்கும் முடிவில் உள்ளாராம்.

அதேநேரம் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா.

இந்நிலையில் தற்போது வேலூர் அருகேயுள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலில் வழிபாடு செய்துள்ளார் சமந்தா. ஸ்ரீபுரம் பொற்கோவில் சென்ற அவர், சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள மத குருமார்களிடம் ஆசி பெற்றுள்ளார்.

அதன் பிறகு அங்குள்ள சுவர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்துள்ளார் சமந்தா. அவருக்கு கோயில் நிர்வாக ஊழியர்கள் நல்ல முறையில் உபசரித்து சிறப்பித்துள்ளனர். தொடர்ச்சியாக தான் நடிக்கும் படங்கள் தோல்வியடைந்து வருவதால் ரொம்பவே மன அழுத்தத்தில் இருக்கிறாராம்.

அதுமட்டும் இல்லாமல் பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டதால் மன அமைதி தேடி கோயில் கோயிலாக சென்று வருகிறாராம் சமந்தா. இன்னொரு பக்கம் மயோசிடிஸ் பிரச்சினையில் இருந்தும் விரைவில் குணமாக வேண்டும் என்பதே சமந்தாவின் வேண்டுதலாக உள்ளதாம்.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்