பொழுதுபோக்கு

தினமும் 10 பாட்டீல் பீர்.. ரத்த வாந்தி எடுத்தும் அடங்காத ஆசை… இறுதியில் மரணம்

நடிகர் கலாபவன் மணி மரண விவகாரத்தில் திடீர் திருப்பமாக அளவுக்கு அதிகமாக அவர் பீர் குடித்ததே மரணத்திற்கு காரணம் என விசாரணை அதிகாரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழில் ‛ஜெமினி’, ‛மறுமலர்ச்சி’, ஜே.ஜே., உனக்கும் எனக்கும், வாஞ்சிநாதன், குத்து, எந்திரன், மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கலாபவன் மணி. கடந்த 2016-ம் ஆண்டு திருச்சூர் , சாலக்குடியில் அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.

திருச்சூர் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை நடத்தியதில், அவரது ரத்தத்தில் எத்தனால், மெத்தனால் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் கலாபவன் மணியின் மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து 2019-ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் விசாரித்த ஐ.பி.எஸ். அதிகாரி உன்னிராஜன் கூறியது,

கலாபவன் மணி பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் 10 முதல் 12 பாட்டீல் வரை பீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 2016 ம் ஆண்டு மரணமடைவதற்கு முன் 10 பாட்டீல் பீர் குடித்ததில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரத்த வாந்தி எடுத்த நிலையில் மேலும் பீர் குடித்ததால் ரத்தத்தில் மெத்தில் ஆல்ஹால் அதிகளவு இருந்தது பிரேதபரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் மரணமடைந்தார் என்றார்.

(Visited 12 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்