நடிகர் அர்ஜுன் மகளுக்கு விரைவில் திருமணம்! மாப்பிளை யார் தெரியுமா?
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாப்படும் நடிகர் அர்ஜுன்.
இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷாலுடன் பட்டத்து யானை படத்தில் நடித்து பிரபலமானார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவிற்கு விரைவில் நடிகர் தம்பி ராமையாவின் மகனான நடிகர் உமாபதியுடன் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உமாபதியும், ஐஸ்வர்யாவும் காதலித்து வந்த நிலையில், பெரியவர்கள் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக தகவல் கசிந்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





