இலங்கை செய்தி

யாழ், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்ற நடவடிக்கை?

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லையென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  வெளியாகும் ஊடக செய்திகள் தொடர்பாக இன்று (03) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது, இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்பு செயலாளரும் விடயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறிய அமைச்சர், இவ்வாறான செய்திகளை சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு அமைச்சு தற்போது அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு செயலாளர் இது தொடர்பாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்குத் தயாராக இருப்பதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. பாதுகாப்பு அமைச்சு அவ்வாறு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவே இல்லை.

இவ்வாறான தகவல்களைப் பரப்பி மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவது குறித்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அதனால் இவ்வாறான பொய்யான தகவல்களைச் சமூகமயப்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஆகவே யாராக இருந்தாலும் அது குறித்த தகவல்களுக்குப் பொறுப்பேற்று அந்தச் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதே சிறந்தது. ஏனெனில் இவ்வாறான செய்திகள் ஊடாக மக்கள் மத்தியில் ஏற்படுத்த முற்படும் குழப்பம் அவ்வளவு பொருத்தமானது அல்ல” எனவும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!