பிரித்தானியாவில் ரிஷி சுனக் தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நடவடிக்கை!
லிபரல் டெமாக்ராட் கட்சியின் தலைவரான சர் எட் டேவி, ஜூன் மாதம் தேர்தலை கட்டாயப்படுத்தும் முயற்சியில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பதாகக் கூறியுள்ளார்.
பிரேரணையை ஆதரிக்குமாறு டோரி பின்வரிசை உறுப்பினர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல்களில் கன்சர்வேடிவ் கட்சிக்கு ஏற்பட்ட மோசமான முடிவுகளை அடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.





