இலங்கை

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களுக்கு நியாயமான தீர்வு வழங்க நடவடிக்கை

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் அதிகரித்த இடவாடகைக் கட்டணம் அறவிடப்படுவதாக, வர்த்தகர்களாலும், சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தினராலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன். கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் இராஜபாலன் புவனேஸ்வரன், உபதலைவர் கறுப்பையா ஜெயக்குமார், உறுப்பினர் அருளானந்தம் யேசுராஜன் உள்ளிட்டோர் நேற்றைய தினம் (26) வடக்குமாகாண ஆளுநரை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, புதிய மதிப்பீட்டுத் தொகையின் அடிப்படையிலான கட்டண அறவீட்டினால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைச் சுட்டிக்காட்டி, அதனைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உரிய திணைக்களங்களோடு கலந்துரையாடி கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் பாதிக்கப்படாத வகையிலான தீர்வைப் பெற்றுத்தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்