TikTok நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை – நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்
உலகளவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக ByteDance நிறுவனம் அறிவித்துள்ளது.
ByteDance நிறுவனத்தின் TikTok தளத்தில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு நீக்கப்படவுள்ளது.
பணிநீக்கம் குறித்து இந்த வாரத் தொடக்கத்தில் நிறுவனத்திற்குள் மட்டும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விளம்பரப் பிரிவிலும் செயலாக்கப் பிரிவிலும் பணிபுரியும் ஊழியர்கள் இந்த அறிவிப்பினால் பாதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
பாதிக்கப்படும் ஊழியர்கள் சிலருக்கு, மற்ற பிரிவில் வேலை பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமெரிக்க இணையத் தொழில்நுட்ப வெளியீடான The Information தெரிவித்தது.
சிங்கப்பூரிலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸிலும் (Los Angeles) TikTok நிறுவனத்தின் இரண்டு தலைமையகங்கள் அமைந்துள்ளன.
அறிவிப்பு பற்றிக் கேட்டபோது TikTok உடனடியாகப் பதில் தரவில்லை.