சிங்கப்பூரில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
சிங்கப்பூரில் சமூக வலைத்தளங்கள் சிலவற்றில் போலியான கணக்குகளை கண்டுபிடித்து அவற்றை தடைசெய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
வெளிநாட்டுக் கட்டமைப்பைச் சேர்ந்த 95 சமூக ஊடகக் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு அறிவித்தது.
இதனை தொடர்ந்து அரசாங்கத்தினால் அந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
அரசாங்கத்தின் ஆலோசனைக்கு TikTok கட்டுப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆலோசனையை ஆய்வு செய்து, உள்ளூர் சட்டங்களை மீறும் ஊடகங்களை அகற்றுவதாக YouTube தெரிவித்துள்ளது.
ஊடகங்களை அகற்றுவதைப் பொறுத்தமட்டில் ஒவ்வோர் அரசாங்கத்துக்கும் வெவ்வேறு கோரிக்கைகள் இருப்பதாக YouTube குறிப்பிட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)