மலேசியாவில் 12 வயதில் சாதனை – பல்கலைக்கழகத்தில் இணையும் சிறுவன்

மலேசியாவைச் சேர்ந்த 12 வயதான Izz Imil என்ற சிறுவன் கணிதத் துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ள தயாராகி வருகின்றார்.
Izz Imil தலைநகர் கோலாலம்பூரிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மிக இள வயது மாணவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சிறுவனின் சாதனை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
பல்கலையின் சிறப்புச் செயற்குழு நடத்திய நேர்காணலில் சிறந்த தேர்ச்சி பெற்றார்.
இதனை அடுத்து Izz Imil இளநிலைப் பட்டம் பயில வாய்ப்பு வழங்கப்பட்டதாக அதன் நிர்வாகம் கூறியது.
மிக இள வயது மாணவர் என்பதால் பல்கலை வாழ்க்கைக்குப் பக்குவப்படுத்திக்கொள்ள Izz Imilக்கு போதிய அவகாசத்தை வழங்கும்படி பல்கலையின் நிர்வாகம் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
(Visited 27 times, 1 visits today)