பாகிஸ்தானில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள் – 24 பேர் பலி, பலர் படுகாயம்!
பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற தனித்தனி சாலை விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 45 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா (Sargodha) நகரில் முதல் விபத்து ஏற்பட்டது. பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் சென்ற லொறி மூடுப்பனி காரணமாக சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மக்ரான் கடலோர நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இரண்டு விபத்துகள் தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





