மட்டக்களப்பு-பொலன்னறுவை வீதியில் விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் வைத்தியசாலையில்!
மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதியில் வாழைச்சேனையில் உள்ள வாகனேரி பகுதியில் வேன் ஒன்று டிப்பர் லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று இடம்பெற்ற நிலையில் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டுபேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இருப்பினும், காயமடைந்த பயணிகளில் ஒருவரான வெலிகந்தையைச் சேர்ந்த 74 வயதுடையவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் சிக்கிய டிப்பர் லாரியின் சாரதியும் காயமடைந்து தற்போது வாழைச்சேனை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





