மோனிகா பாடலை ரசித்த நிஜ மோனிகா பெல்லூசி

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான உலக புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் மோனிகா பெல்லுச்சி. ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது.
நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு Tribute பண்ணும் விதமாக கூலி திரைப்படத்தில் மோனிகா என்கிற பாடலை அனிருத், லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருந்தனர். நடிகை பூஜா ஹெக்டே இப்பாடலில் நடனமாட இருந்தார்.
இந்த பாடல் உலகளவில் படுவைரலானது. ரசிகர்கள் பலரும், நடிகை மோனிகா பெல்லுச்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோனிகா பாடல் குறித்து கமன்ட் செய்து வந்தனர்
இந்நிலையில், மோனிகா பாடலை நடிகை மோனிகா பெல்லுச்சி சமீபத்தில் பார்த்துள்ளாராம். பாடலை பார்த்துவிட்டு ரசித்ததாகவும், அவர் பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் சமீபத்தில் பூஜா ஹெக்டேவை பேட்டி எடுத்த தொகுப்பாளினி கூறியிருந்தார். இதை கேட்ட பூஜா ஹெக்டேவிற்கு இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.