ஐந்து முறை மிஸ்டர் மதுரை : ரோபோ ஷங்கரின் திறமை

விஜய் டிவி மூலம் வெள்ளித்திரையில் நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகர் ரோபோ ஷங்கர். தனது கடின உழைப்பால் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் சம்பாதித்தார்.
பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ ஷங்கர், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரோபோ ஷங்கருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவருடைய மறைவு பெரும் துயரத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது.
மறைந்த நடிகர் ரோபோ ஷங்கர் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல தனது இளம் வயதிலேயே பாடி பில்டிங் மூலம் பல வெற்றிகளை தன்வசப்படுத்தியவர். ஆம், ஐந்து முறை மிஸ்டர் மதுரை பட்டத்தை ரோபோ ஷங்கர் வென்றுள்ளார்.