பொழுதுபோக்கு

முதன்முறையாக மனைவி குழந்தைகள் பற்றி பேசிய அபிஷேக் பச்சன்

நடிகை ஐஸ்வர்யா ராயும் அவரது காதல் கணவர் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யவுள்ளார்கள் என்றும் அபிஷேக் பச்சன் வீட்டில் ஐஸ்வர்யா இல்லை என்றும் செய்திகள் பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது.

இதற்கு அபிஷேக் பச்சன், என் கை விரலில் திருமண மோதிரம் இருக்கிறது, என்றும் விவாகரத்து என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் விளக்கமும் கொடுத்திருந்தார். தற்போது மீண்டும் ஐஸ்வர்யா ராயை பிரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதில், சமூகவலைத்தளங்களில் பேசப்படுவதை நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டேன். என் அம்மாவும் ஐஸ்வர்யா ராயும் வெளி உலகில் நடிப்பது வீட்டிற்குள் நுழையாதவாறு பார்த்துக்கொள்கிறார்கள்.

அதனால் வீட்டில் நிம்மதி இருக்கிறது. இரவில் படுத்தால் தூக்கம் வருகிறது. நான் திரையுலகை பார்த்து வளர்ந்தவன் என்பதால் எதை கண்டுகொள்ள வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். சோசியல் மீடியாவின் பேச்சுக்கள் என்னை பாதிப்பது இல்லை.

வீட்டில் நிம்மதி இருக்க மட்டுமல்ல மகள் ஆராத்யாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அதனால் தான் என்னால் படங்களில் முழு கவனம் செலுத்த முடிகிறது என்று மனைவி ஐஸ்வர்யா ராயை பாராட்டி பேசியிருக்கிறார்.

மேலும், ஆராத்யா பிறந்தப்பின் கெரியருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், என் மகளை கவனித்துள்ள ஆயா வேண்டாம் என்று சொல்லி அவரே பார்த்துக்கொண்டு வருகிறார். மகளே உலகம் என்று வாழும் ஐஸ்வர்யா ராயை பாராட்டாதவர்களே இல்லை.

ஆனால் அவர் எப்போது வெளியே வந்தாலும் ஆராத்யா கையை விடாமல் பிடித்துக்கொண்டு போவதை சமூகவலைத்தள பக்கங்களில் கிண்டல் செய்கிறார்கள்.

பாலிவுட்டில் நேற்று பிறந்த குழந்தைகள் எல்லாம் தனியாக நடக்கிறார்கள். ஆனால் டீனேஜராகியும் ஆராத்யா பச்சனால் தனியாக நடக்க முடியவில்லை, மகளின் கையை பிடிப்பதை விட்டுவிடுங்கள், மகளுக்கு கொஞம் சுதந்திரம் கொடுங்கள் ஐஸ்வர்யா என்று மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.

கிண்டல் செய்பவர்கள் செய்யட்டும் என் மகள் கையை பிடித்து பத்திரமாக அழைத்துச்செல்வேன் என்பதில் ஐஸ்வர்யா ராய் உறுதியாக இருக்கிறார் என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்