பொது இடத்தில் தொழுத இளைஞர் தாக்கப்பட்டார்!! வைரலாகும் காணொளியின் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்
இளைஞர் ஒருவரை அடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளைஞன் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் காணலாம்.
இதன் போது நபர் ஒருவர் அந்த இளைஞனை முகத்தில் எட்டி உதைத்துள்ளார். இதற்குப் பிறகு, அவர் கடுமையாக உதைக்கிறார்.
இந்த காணொளி சீனாவைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. பொது இடத்தில் தொழுகை நடத்தியதற்காக உய்குர் முஸ்லிம் இளைஞரை வேற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அடித்துள்ளார்.
சீனாவில் பொது இடத்தில் தொழுகை நடத்தும் போது உய்குர் முஸ்லீம் ஒருவர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த காணொளி வேறொரு சம்பவத்தின் போது 2020ம் ஆண்டு தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 2020 இல் இந்த காணொளி தாய்லாந்தின் நாகோன் சவான் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில், காணொளியில் காணப்பட்ட சியாங் மாய் என்ற பாதிக்கப்பட்ட பெண் டிஎம்என் என்ற நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் பணத்தை வசூலிக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல நேரங்களில் வாடிக்கையாளர்கள் நிதி நெருக்கடியால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாடிக்கையாளர்களின் கடனை அடைக்க நண்பர்களிடம் கடன் வாங்கி வாடிக்கையாளர்களிடம் பணம் கிடைத்ததும் நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுத்து வந்தார் சியாங்.
இது குறித்து அந்நிறுவனம் அறிந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிய சக ஊழியர்கள், சியாங்கை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த நிறுவனம் மீது பொலிசார் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.
வைரலான காணொளி மூலம் சமூக ஊடகங்களில் கூறப்படும் கூற்று முற்றிலும் தவறானது என்பது தெளிவாகிறது. இந்த காணொளி சீனாவில் உய்கர் முஸ்லீம் மீதான தாக்குதல் அல்ல என்பது தெளிவாகியுள்ளது.