இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் இளம் வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மந்தகை வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் வைத்தியசாலை வளாகத்தில் உள்ள அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 30 வயதான இளம் தமிழ் வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியர் கடந்த 10ஆம திகதி தனது பணியை முடித்துக் கொண்டு வெளியேறியிருந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் பணிக்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து அறிந்த நண்பர் ஒருவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, அவரை பலமுறை கூப்பிட்ட போதிலும் அவர் பதிலளிக்கவில்லை.

எனவே அவர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, ​​​​ அவர் படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார்.

வைத்தியரின் மூக்கில் இருந்து இரத்தம் வடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கே.வாசுதேவன் பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!