தமிழ்நாடு

பல்லாவரம் அருகே கழிவறை சுத்தம் செய்தல் தொடர்பான தகராறில் பெண்ணொருவர் பலி!

பல்லாவரம் அருகே கழிவறை சுத்தம் செய்வது குறித்து ஏற்பட்ட தகராறில் பெண் தள்ளிவிடபட்டதில் உயிரிழந்த சம்பவம்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (45) டெய்லர் வேலை செய்து வருகிறார் இவருடைய மனைவி சரிதா (40) நாகல்கேணி பகுதியில் உள்ள காலணி கம்பனியில் வேலை பார்த்து வந்தார்,

நேற்று இரவு பொதுகழிப்பிடத்தை சுத்தம் செய்வது குறித்து கோபால் மற்றும் பக்கத்து வீட்டுகாரரான செல்வக்குமார் ஆகிய இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் மதுபோதையில் இருந்த இருவரும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர் சத்தம் கேட்டு வெளியே வந்த சரிதா இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற போது கீழே தள்ளிவிடபட்டதில் தலையில் பலத்த காயமடைந்தவர் மயங்கினார்,

இதனை கண்ட கணவர் கோபால் உடனடியாக சரித்தாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்,

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சங்கர் நகர் பொலிஸார் கோபால் மற்றும் செல்வகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!