மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் காற்றின் வேகம் அதிகரிக்கும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





