சிறையிலிருந்து தப்பியோடிய கைதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் பல கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர், சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.33 வயதான ஜோயல் ரோய் என்ற சந்தேக நபர் இவ்வாறு சிறையிலிருந்து தப்பியுள்ளார்.
சட்பரி மாவட்ட சிறையிலிருந்து இவர் தப்பிச் சென்றுள்ளார்.சட்பரி மற்றும் ஒன்றாரியோவில் மூன்று பேரை படுகொலை செய்ததாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.5 அடி ஆறு அங்குலம் உயரமான குறித்த நபர் சுமார் 150 பவுண்ட் எடையுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேக நபர் பற்றிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் வழங்குமாறு கனடிய பொலிஸார் மக்களிடம் கோரியுள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)