டிரம்பின் பதவியேற்புக்குப் பிறகு ஸி மற்றும் புதின் இடையே காணொளி அழைப்பு மூலம் கரந்துரையாடல்
அமெரிக்காவின் அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் காணொளி அழைப்பு மூலம் கலந்துரையாடினர்.
சீனா-ரஷ்யா உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று இருவரும் உறுதி பூண்டதாக இருநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
சீன அதிபர் ஸி தமது நெருங்கிய நண்பர் என்று அதிபர் புட்டின் தெரிவித்துக்கொண்டார்.நட்பு, பரஸ்பர நம்பிக்கை, ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவும் ரஷ்யாவும் இருநாட்டு உறவை வலுப்படுத்துவதாக அவர் கூறினார்.
உத்திபூர்வ ஒருங்கிணைப்பு, பரஸ்பர ஆதரவை வலுப்படுத்துதல், இருநாடுகளின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை தொடருமாறு அதிபர் புட்டினிடம் அதிபர் ஸி கேட்டுக்கொண்டார்.
இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2023ஆம் ஆண்டில் 240 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது.2021ஆம் ஆண்டைவிட இது 64 சதவீத்த்திற்கும் அதிகம்.
உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்குத் தேவையான மிக முக்கியமான பொருள்களை சீனா வழங்குவதாகக் கூறப்படுகிறது.
அதிபர் ஸியும் அதிபர் புட்டினும் காணொளி அழைப்பு மூலம் கலந்துரையாடியதற்கும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றுக்கொண்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.