உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!
31 வயதான உகண்டா பிரஜை ஒருவர் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மறைத்து வைப்பதற்காக கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய சந்தேக நபர் கட்டாரில் இருந்து நாட்டை வந்தடைந்துள்ளார்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபரிடம் இருந்து 14 கொக்கெய்ன் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)