மத்திய கிழக்கு

செல்பி எடுக்க போஸ் கொடுத்த இளம் பெண் மீது மோதிய ரயில்!- வைரலான வீடியோ

செல்பி எடுப்பதற்காக ரயில் தண்டவாளம் அருகில் இளம்பெண் ஒருவர் போஸ் கொடுத்த போது அவரை ரயில் மோதும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

துருக்கியில் இளம் பெண் ஒருவர் ரயில் மோதிய அதிர்ச்சிகரமான சம்பவத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

இந்த விபத்தானது அந்த பெண் தன்னுடைய நண்பர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக ரயில் தண்டவாளத்தின் அருகில் நிற்கும் போது ஏற்பட்டுள்ளது.இது தொடர்பான வீடியோ தற்போது வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.

அதில் விபத்தில் சிக்கிய பெண் துருக்கியின் பெலெமெடிக் இயற்கை பூங்கா பகுதியில் தன்னுடைய நண்பர்களுடன் நிற்கும் காட்சிகளும், அவர்கள் புகைப்படம் எடுக்கும் போது பெயர் வெளியிடப்படாத அந்த பெண் தன் கைகளை தூக்கி போஸ் கொடுத்த போது திடீரென ரயில் மோதும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

அதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண் அலறி கொண்டு கையை பின்னால் எடுக்கவும், அவரது நண்பர்கள் திரும்பி அவரை ஆராய்வதோடு வீடியோ நிறைவடைகிறது.உடனடி பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://web.facebook.com/watch/?v=2662803197217308

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!