மர்மமான மம்மியால் வெடித்துச் சிதறிய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல்
‘டைட்டானிக்’ பார்க்கச் சென்று ‘வெடித்து’ விட்டதாகச் சொல்லப்படும் ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிய ‘பேச்சு’ இது வரை குறையவில்லை.
அவற்றில், ‘அறிவியல்’ கருத்துகளும், ‘அறிவியல் சாராத’ (வேறுவிதமாகக் கூறினால், ‘மாய’ கருத்துக்கள் இல்லாமல் இல்லை) கருத்துகளும் உள்ளன.
இதன்படி, ‘டைட்டன்’ வெடிப்புக்கு, ‘மர்மமான மம்மி’ காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
சுமார் 112 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்துக்குள்ளாகி மூழ்கிய டைட்டானிக் கப்பலை கடந்த 18ம் திகதி பார்வையிடச் சென்ன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியது.
அதில் பயணம் செய்த ஐந்து பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அண்மையில் இந்த கப்பலின் பாகங்கள் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டிருந்து.
விமானம் உள்நோக்கிச் சுருங்கிய ‘உடனடி வெடிப்பு’ காரணமாக விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களின் எச்சங்கள் டைட்டானிக் கப்பல் சிதைவுகளுக்கு மத்தியில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.