கம்போடியா ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து: 20 ராணுவ வீரர்கள் பலி!

கம்போடியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலர் படுகாயமடைந்தனர் .
மேற்கூறிய தகவல்களை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)