செய்தி மத்திய கிழக்கு

காஸாவில் தற்காலிக போர் நிறுத்த – அமெரிக்கா எடுக்கும் முயற்சி…

காஸா போரில் இதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா, எடுத்துவந்துள்ளது.

இந்த நிலையில் முதன்முறையாக தற்காலிக போர் நிறுத்தத்தை கொண்டுவருவதற்கான வரைவு திட்டத்தை ஐ.நா.வில் சமர்ப்பித்துள்ளது.

பதிலுக்கு அனைத்து பிணை கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவின் பிராந்திய எல்லைகளை குறைத்து, அங்கு இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும்படி அந்நாட்டு அமைச்சர்கள் சிலர் பேசிவருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

முதன்முறையாக போர் நிறுத்தம் என்ற வார்த்தையை அமெரிக்கா பயன்படுத்தியதன் மூலம் இஸ்ரேலுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. இயக்குனர் ரிச்சர்ட் கோவன் தெரிவித்துள்ளார்

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!