இலங்கை

பொகவந்தலாவில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் கைது!

பொகவந்தலாவ புனித மரியாள் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி  குறித்த ஆசிரியர் மாணவியை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மாணவி சென்றதையடுத்து அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும்,  ஆசிரியரை ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியை வைத்திய பரிசோதனைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்