இலங்கை

ஆசிரியை ஒருவர் கழுத்தறுத்து கொடூர கொலை

ஊருபொக்க – தம்பஹல உயர்தரப் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியை தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது கழுத்தை அறுத்தும், மார்பில் குத்தியும் கொலை செய்துள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிதாரி மதுமாலி என்ற 29 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

பாடசாலையிலிருந்து பேருந்தில் வந்து இறங்கி, கிராமத்திலிருந்து வீட்டிற்கு நடந்து செல்லும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட யுவதியின் காதலனே இந்த சம்பவத்தை நடத்தியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை நடந்த இடத்தில் சந்தேக நபர் மறைந்திருப்பதாகவும், குறித்த இடத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!