15 ஆண்டுகளின் பின் தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை

கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தேவதாஸ் கனகசபை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தேவதாஸ் கணகசபையை விடுதலை செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த பின்னணியிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)