வாழ்வியல்

ஷேன் வார்னே மரணத்தில் திடீர் திருப்பம் – பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சுக்கு பெயர் போனவர் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரர் ஷேன் வார்னேயின் மரணம் தொடர்பில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தாய்லாந்து சென்ற நிலையில் ஹோட்டல் அறையில் உயிரிழந்தார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கு பலரும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து துக்கம் அனுசரித்தனர்.

இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின் ஷேன் வார்னேவின் இறப்பிற்கு பொலிஸார் கூறிய தகவல்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஷேன் வார்னே ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தபோது அவரது உடலிற்கு அருகில் ஒரு போத்தல் இருந்ததாகவும், அந்த போத்தலில் பாலியல் உணர்வைத் தூண்டும் ‘காமக்ரா’ என்ற மருந்து இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் தடை செய்யப்பட்டிருக்கும் இந்த மருந்து இதயம் பலவீனமானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே வார்னே இதய பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காமக்ரா போத்தலில் இருந்து அவர் எவ்வளவு எடுத்து கொண்டார் என்பது தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமில்லாமல் வார்னேவின் உடலுக்கு அருகில் சற்று வாந்தி எடுத்ததற்கான அடையாளமும், ரத்தமும் இருந்ததாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

முதலில் இதனை அறிந்த மூத்த பொலிஸ் அதிகாரி, அந்த போத்தலை மறைத்தததாகவும் அதனை உடனடியாக அகற்றும்படி அவர் உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மாத்திரை விஷயத்தை மறைத்தது தொடர்பான விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகாரிகளுக்கும் கூட தொடர்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ஏனென்றால் ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வந்ததால் அவரது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த விரும்பாமல் இருந்திருக்கலாம் என காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

(Visited 24 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான
error: Content is protected !!