சிங்கப்பூர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
சிங்கப்பூரில் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவி நாடி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் அத்தகைய சேவைகளை வழங்கும் மருந்தகங்கள் கூறியுள்ளன.
எனினும் மின்-சிகரெட்டுகளின் புழக்கம் தங்களின் முயற்சியைச் சில நேரங்களில் குலைத்துவிடுகிறது என்று அவை தெரிவித்தன. புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரலில் மோசமான கோளாறுகள் ஏற்படலாம்.
அத்தகையோரில் சிலர் சிகிச்சையின்வழி குணப்படுத்தப்படுகின்றனர். புகைக்கும் பழக்கத்திற்கு மீண்டும் அடிமையாகாமல் இருக்க மருந்தகங்கள் உதவித் திட்டங்களை ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு தயார்செய்து கொடுக்கிறது.
ஆனால் மின்-சிகரெட்டுகளின் புழக்கம் அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. மின்-சிகரெட்டுகளை வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் சட்ட விரோதம் என்பதால் பலர் அது குறித்து வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
விளம்பரம்
நிக்கோட்டின் ரசாயனத்தின் அளவு ஒவ்வொரு மின்-சிகரெட்டுக்கும் வேறுபடும். தங்களுக்கு விருப்பமான அளவில் அதிலிருக்கும் நிக்கோட்டினை உள்ளிழுத்துக்கொள்ளவும் ஒருவரால் முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் புகைபிடிப்பதைவிட மின்-சிகரெட்டுகளைக் கைவிடுவது இன்னும் கடினம் என்கின்றனர் மருத்துவர்கள்.