சாய்ந்தமருதில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் ஒருவரின் சடலம் மீட்பு!
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மத்ரஸா பாடசாலை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த எம். எஸ். முஷாப் என்ற 13 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நேற்றிரவு (05.12) பிரதேசவாசிகள் மதரஸா பாடசாலையை முற்றுகையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த மத்ரஸா பாடசாலையின் முகாமையாளரை கைதுசெய்துள்ளனர்.
இந்த மரணத்தால் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.





