வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனைக் கடித்துக் குதறிய தெருநாய்!
வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனைக் கடித்துக் குதறிய போது, அதை தடுக்க வந்த முதியவரை அந்த நாய் கடித்த சம்பவம் ஹாசன் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாவட்டம், ஹாசன் மாவட்டம், பேலூர் நகரின் தாவூத் சாப் தெருவைச் சேர்ந்தவர் அக்ரம்பாஷா. இவரது வீட்டிற்கு கெண்டேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அவரது மகன் முகமது குடும்பத்தினருடன் வந்திருந்தார். வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது முகமதுவின் 3வயது மகன் முகம்மது ஹமாஜ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த நாய், சிறுவனின் கழுத்தை கவ்வியது. இதனால் வலியால், சிறுவன் முகம்மது ஹமாஜ் அலறினார். இதனால் அவனது தாத்தா அக்ரம் பாஷா ஓடி வந்து நாயை விட்டினார்.
ஆனால், இதனால் ஆத்திரமடைந்த நாய், அவர் மீதும் பாய்ந்து கடித்தது. இதனால் அவரது கை, மார்பில் காயம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு அக்ரம் பாஷா குடும்பத்தினர் ஓடி வந்து நாயை அடித்து விட்டினர். காயமடைந்த முகம்மது ஹமாஜ், அக்ரம் பாஷா ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,” இந்த தெருவில் சட்டவிரோதமாக இயங்கும் மாட்டிறைச்சி கடைக்கு தெருநாய்கள் அதிகம் வருகின்றன. இரவு நேரங்களில் வீட்டின் முன் விளையாடும் குழந்தைகள், சாலையில் செல்வோரை நாய்கள் கடித்து வைக்கின்றன.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினர். “சட்டவிரோதமாக இயங்கும் மாட்டிறைச்சி கடையை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்” என்று கூறினர். இது குறித்து பேலூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.