தோஹாவிலிருந்து பாரிஸுக்கு சென்ற விமானத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழப்பு!

தோஹாவிலிருந்து பாரிஸுக்குச் செல்லும் விமானத்தில் பயணித்த இலங்கை பெண் ஒருவர் உடல் நலப்பாதிப்பால் அவதியுற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த விமானமானது எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எர்பிலில் உள்ள இலங்கையின் கெளரவ தூதரக அதிகாரி அஹமட் ஜலால், இதனை அறிவித்துள்ளார்.
தோஹாவிலிருந்து பாரிஸுக்குச் செல்லும் விமானத்தில் இலங்கைப் பெண் ஒருவர் பயணித்ததாகத் தமக்கு அறிவித்ததாகத் தெரிவித்தார்.
“விமானத்திற்குள் அவசரநிலை ஏற்பட்டது. வெளிப்படையாக, அவர்கள் [பைலட்] எர்பில் விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, தரையிறங்குமாறு கோரினர். விமானம் மாலை 5:40 மணிக்கு எர்பில் விமான நிலையத்தை வந்தடைந்தது, ”என்று அவர் மேலும் கூறினார்.
உதவி வழங்க மருத்துவ குழுக்கள் வந்தன, ஆனால் அந்த பெண் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
81 வயதான அவர் பிரான்சில் வசித்து வந்தவர் எனவும், அவருடைய மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.