இலங்கை

இத்தாலியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் கைது!

இத்தாலிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணை சந்தேக நபர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

25 வயதுடைய பெண் சந்தேக நபரால் தரையில் வீசப்பட்டு பூங்காவிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் அலறியதையும் கேள்விப்பட்ட மக்கள் குறித்த பகுதிக்கு வருகைதந்த நிலையில், அவர் தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது.

எனினும் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரின் உடலிலும் அவரது சூட்கேஸிலும் பச்சை குத்தியிருந்தமை அவரை அடையாளம் காண உதவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 6 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content