ஆஸ்திரேலியா

இணையத்தில் வைரலாகி வரும் உருண்டை வடிவ முட்டை !

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாக்குலின் பெல்கேட் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில் உருண்டை வடிவ முட்டை குறித்த காட்சிகள் உள்ளது.

ஆஸ்திரேலியா- வூல்வொர்த் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பெண் ஒருவர் ஷாப்பிங் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு தான் உருண்டை வடிவ முட்டையை கண்டுள்ளார்.

பார்ப்பதற்கு வித்தியாசமாக தெரிந்ததால் உடனே அந்த முட்டையை வாங்கிய அவர் இதுபோன்ற வடிவில் வேறு எங்காவது முட்டைகள் இருக்கிறதா என கூகுளில் தேடியுள்ளார்.

அப்போது 10 லட்சத்தில் ஒன்று தான் இதுபோன்ற வடிவில் இருக்கும் என தெரியவந்துள்ளது. கடைசியாக இது போன்று கிடைத்த ஒரு முட்டை இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சத்திற்கு விற்பனையாகி இருப்பதும் அவருக்கு தெரியவந்தது.

அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள முட்டை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் உருண்டை வடிவ முட்டை வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!