அறிவியல் & தொழில்நுட்பம்

யூடியூபில் அறிமுகப்படுத்தவுள்ள சிறப்பு அம்சம் – பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

யூடியூப் சமீபத்தில் அவர்களின் தளத்தில் யார் வேண்டுமானாலும் கன்டென்ட் பதிவிடும் வகையில் புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை அறிமுகம் செய்தது. இந்த கருவிகளைப் பயன்படுத்தி வீடியோக்களை எளிதாக எடிட் செய்து யூடியூபில் பதிவேற்றலாம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கூகுள் அதிகமாக முதலீடு செய்து அதன் பல தயாரிப்புகளை கூகுளின் செயலிகளோடு ஒருங்கிணைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து ‘யூடியூப் கிரியேட்’ எனப்படும் புதிய செயலி மற்றும் ஏஐ அம்சங்கள் பொருந்திய கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவிகளில் சிறப்பானதாக ட்ரீம் கிரியேட் என்பது உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான சோதனையை யூடியூப் தொடங்கும் என அறிவித்துள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி ஒருவர் தனக்கு தோன்றும் யோசனையை டைப் செய்தால் போதும், அதற்கு பொருந்தும் அறியான வீடியோ அல்லது படங்களை தானாகவே உருவாக்கி விடும். இந்த அம்சத்தைப் பயன்படுத்தி கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்களின் கற்பனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம்.

இது தவிர அடுத்த ஆண்டு கூடுதலாக பல ஏஐ அம்சங்கள் யூட்யூபில் வர உள்ளது. இதில் முதலாவதாக யூடியூப் ஸ்டுடியோ ஏஐ அம்சத்தைக் கொண்டு வர யூடியூப் திட்டமிட்டுள்ளது. இதை பயன்படுத்தி படைப்பாளிகள் அவர்களின் வீடியோக்களை எப்படி உருவாக்கலாம் என்பதற்கான யோசனைகள் மற்றும் அவுட்லைன்களைப் பெற முடியும். ஒவ்வொரு சேனலும் எப்படி இயங்குகிறது அவற்றை மேம்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பது போன்ற பல யோசனைகளையும் இந்த அம்சத்தால் கொடுக்க முடியும்.

கிரியேட்டர் மியூசிக் என்ற அம்சத்தை பயன்படுத்தி அவர்களின் வீடியோவுக்கான சிறந்த மியூசிக்கை ஒருவரால் கண்டுபிடிக்க முடியும். இது ஒரு பிரிமியம் அம்சமாக இருப்பதால் இதற்கான விலையும் நிர்ணயிக்கப்படும். இறுதியாக ஆட்டோமேட்டிக் டப்பிங் அம்சம். இது தற்போது கட்டமைப்பில் இருந்து வருகிறது. இந்த அம்சத்தால் ஒரு மொழியில் இருக்கும் காணொளிகளை பல மொழிகளுக்கு எளிதாக டப் செய்ய முடியும்.

இதுபோன்று மேலும் பல அம்சங்களை யூடியூப் தங்களின் தளத்தில் கொண்டு வர இருக்கிறார்கள்.

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!