முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விஷேட அறிவிப்பு
																																		மழையுடன் கூடிய காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் (19.12.2023) இயங்காது என்பதனை முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு
1 மு/மன்னகண்டல் அ.த.க.பாடசாலை
2 மு/இருட்டுமடு தமிழ் வித்யாலயம்
3 மு/நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு
1.மு/கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலை
2.மு/கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலை
3.மு/முத்துவிநாயகபுரம் மகாவித்தியாலயம்
4.மு/பேராறு அ.த.க.பாடசாலை
5.பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம் (கற்சிலைமடு)
ஆகிய பாடசாலைகள் நாளையதினம் இயங்காது என மாவட்டச் செயலாளர்,மாவட்ட செயலகம், முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தோடு முல்லைத்தீவு பரந்தன் வீதியில் விசுவமடு மாணிக்க பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள வீதியை குறுக்கறுத்து வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருக்கின்றது. எனவே இதனால் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
        



                        
                            
