கிரிக்கெட் பார்க்க மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு!!! விரட்டியடித்த நடுவர்

லங்கா பிரீமியர் லீக் திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற பரபரப்பான தொடக்கப் போட்டியின் போது எதிர்பாராத விதமாக மைதானத்திற்கு பாம்பு ஒன்று நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
போட்டியின் தொடக்க ஆட்டத்தில் காலி டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ளை அவுரா அணிகள் மோதிய போட்டி சமநிலையில் முடிந்தது.
இறுதியில் சூப்பர் ஓவரில் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.
தம்புள்ளை வெற்றிக்காக 181 ஓட்டங்களைத் துரத்திக் கொண்டிருந்த போது, ஒரு பாம்பு மைதானத்திற்குள் நுழைந்து, சில நிமிடங்களுக்கு ஆட்டத்தை நிறுத்தியது.
Hello, stranger. Where is your accreditation card? 🐍
Even the Sri Lankan wildlife can’t resist the action at the LPL! 🏏#LPL2023 #LiveTheAction pic.twitter.com/R9Fa5k1D3p
— LPL – Lanka Premier League (@LPLT20) July 31, 2023
காலி டைட்டன்ஸ் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் தான் முதலில் பாம்பை கண்டு களத்தில் இருந்த நடுவர்களை எச்சரித்தார்.
பாம்பு வெறியேறும் வரை போட்டி நிறுத்தப்பட்டது. இது குறித்த காணொளி லங்கா பிரீமியர் லீக் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் 2023 தொடரில் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன.
பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன், பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் உள்ளிட்டவர்கள் இந்த தொடரில் கலந்துகொண்டுள்ளனர்.